பாட்டில்களில் மருந்துகள் பழங்கள்
மற்றும் மரணங்கள்
எனக்கு மற்றுமொரு முறை மூத்திரம் போக வேண்டும் போல் இருந்தது. எழுந்து மறு முறை செல்ல ஆயாசமாகவும் அலுப்பாகவும் இருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் எழுந்தேன். வெளிளை பீங்கான் ஏந்தலில் எனது ரத்தம் கலந்த சிறுநீர் தாரையாக சிகப்புக் கோடுகளாக இறங்குவதைப் பார்க்க ஏற்படும் பயமும் ஒத்திப் போடக் காரணம். மூத்திரத் தூவாரத்திலிருந்து ஒரு கூர்மையான ஊசி உச்சந் தலை வழியே வௌ¤ப்படும் மூர்க்கமான வலி. சதைத் துண்டுகளும் இரத்தக் கவுச்சியுமாக மூத்திர நாற்றம் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை. வீடோ கோடு கீறியது போல் நீளமானது.
புறக்கடை தனியானது. அறைகள் முடிவுக்கு வந்தபின் கடைசிக் கதவு திறத்ததும் வெறும் வெளி. அதன் முடிவில் சிறு சதுரம். கழிப்பறை. கழிப்பறை செல்லாமல் வேறு எங்கும் கழிவுகளை வௌ¤யேற்ற முடியாது. இரவு. பின்இரவு. வலியும் நோயும் அதிகமாகும். கணவனைத் துணைக்கு அழைத்துத் தான் செல்ல வேண்டும். திறந்த வௌ¤ பயத்திற்காக மட்டு மல்லாது பலவீனமான உடலுக்காவும் கூட. உடம்பு கொதித்துக் கொண்டு, கண்கள் வழியே உஷ்ணம் வௌ¤வந்து கொண்டு இருந்தது. உறங்கும் கணவனை இருமுறை அழைத்துப் பின் நானே கதவு திறந்து இருள் தாண்டி சிறுநீர் கழித்து விட்டு வந்தேன்.
மாடியில் குடியிருப்பு. டிசிமெண்ட் தரை திறந்த வௌ¤ தாண்டி பின் எனது படுக்கையை அடைந்து படுக்கும் பொழுதிற்கெல்லாம் திரும்பவும் ரத்தம் கலந்த சிறுநீர் தாரை, வாயிலை எட்டிப் பார்க்கும். வீடோ கோடு போல. பாண்டி ஆட கோடிட்டிருந்தது போன்று தடுப்புச்சுவர். ஒரு காலத்தில் அகலமாக இருந்த வீடுகள் வம்சப் பெருக்கத்தாலும், அதன் வகுத்தலாலும் அகலம் சுறுக்க குறுகி நீண்ட வாக்கிற்கு வந்து நிற்கிறது.
அகலம் குறுகக் குறுக சன்னல்கள் வைக்க இயலாத அடுத்த அடுத்த சுவர்களைக் கொண்டு காற்றடைத்ததும் காற்றுக்காக ஏங்கி, ஓட்டின் கண்ணாடி சதுரத்தில் வௌ¤ச்சமும் சூரியனும் நிலவும் நட்சத்திரமுமாக கருத்த வௌ¤யில் வெளுத்த சதுரங்களை ஆங்காங்கே கொண்டு நிற்கும். வீடு அருகில் இரண்டு புறமும் இது போல கோர்த்து வாங்கப்பட்ட ஓட்டு வீடுகள். பம்பாய் பணம் கொண்டு கிராமத்தை ஆச்சரியப் படுத்த நான் இருந்தது மாடிவீடு. எங்கும் சிமெண்ட் இட்டு அடைக்கப் பட்ட கட்டங்கள். சுவர் முழுவதும் இடைவௌ¤யற்று மாடியும் எழும்பி நிற்கிறது. மாடிக்கும் கீழுக்குமாக காற்றோட்டம் கருதி கூடம் என்ற நீள சதுரத்தில் ஒரு ஓரம் நடுப்பகுதி பெருத்து வீங்கி தரையிலிருந்து மேலெழும்பி நிற்கும். அந்தப் பகுதி முழுவதும் குறைந்த சுவர்களையும் நிறைந்த ஐன்னலும் கதவுமாக மாடிக்கும் கீழுக்குமான காற்றோட்டத்தைதோடு கூட பேச்சுக்களையும் இருவருக்கும் பரிமாறும் பகுதி அது. கலர் கண்ணாடிக் கதவுகள் எப்போதும் மூடப்படாது. அது மூடினால் காற்றடைத்து இறந்து விடுவோம் என்று எப்போதும் தோன்றும்.
வலியோடு வந்து படுக்கையை அடைந்த நான் உறக்கம் இன்றி முழித்த நிலையில் மல்லாந்து கிடந்தேன், அடுத்த சிறுநீர் கழிப்பின் அழைப்பை எதிர் பார்த்து. தலை மாட்டில் ஒரு பூனை தன் கீச்சுக் குரலில் அழைத்தது. தலை எம்பிப் பார்த்த என்னின் பார்வையில் அந்தப் பூனை படாமல் இருந்ததால் அது வீட்டிற்கு வௌ¤யே என்று கொண்டேன். ஆனால் சிறிது நேரத்திலேயே இரண்டு பூனைகள் மிக அருகில் தலைக்கு மேல், அதன் முகங்கள் தலைகீழாகப் பார்க்க என்னைப் பார்த்து குரல்கொடுத்துக் கொண்டிருந்தன.இரண்டு நாலாயிற்று. பார்க்கப் பார்க்க நாலு இன்னமும் அதிக எண்ணக்கையில் பூனைகள் தலையைச் சுற்றி சூரியக் கதிர்களென முளைத்து விட்டிருந்தன. ஏறக்குறைய ஏழு பூனைகள். சூரிய ரதம் கட்டி இழுக்க ஏற்பாடான குதிரைகள்.எல்லாம் என்னை நோக்கித் தன் முகங்களை இழுத்துக் கொண்டு பாயத் தயார் நிலையில். எறிந்து விட்ட கல்லென ஒன்று என் தலையைக் கவ்வி இழுத்தது. பூனை நரமாமிசம் சாப்பிடும் என்று கேள்விப் பட்டதில்லையே நான். அதன் கண்களில் அலாதி பிரியமும், வெறியும், களிப்பும். எனக்கோ, வெறும் பீதி மட்டுமே. சின்ன மிட்டாய்த் துண்டை இழுத்துப் போக முயற்சிக்கும் எறும்புகளைப் போல என் பக்க வாட்டில் பூனைகள் வளர்ந்து விட்டிருந்தன. என் மூத்திரக் கவிச்சைக்கு வந்ததா இந்தப் பூனைகள்? அலறல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தன.
என்னை அவைகள் தொடர்ந்து இழுத்துச் சென்றுவிடா வண்ணம் நான் பம்பரம் போல என் உடலைச் சுழற்றிச் சுழற்றித் திருகிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவைகளும் என் உடலைக் கவ்விக்கொண்டு என்னுடனேயே சுற்றிச் சுற்றி இடுப்புத் துணி வட்டமிடுவதாய் லேசாக இல்லாமல் பாராசூட் இறங்குவதாக என்னையும் கவ்விக் கொண்டு கீழிறக்கமுயன்றன. பூனைகளில் அலறல் சன்னல் இல்லா மற்ற சுவர்களிலும் ஓவியம் வரைந்து வழிந்து வழிந்து கீழிறங்கியது. பூனைகளின் குரல் வழிசலால் சுவற்றில் ஆங்காங்கே தாரைகள் ஏற்பட்டு முந்தைய, அதற்கு முந்தைய என்று கீழ் வர்ணங்களைத் தோலுரித்துமேலெழுப்பிக் கொண்டிருந்தன. ஆதி சாயமும் காணாமல் போனால் சிமெண்டும், செங்கல்லும் உரிய ஆரம்பிக்கும். ஓட்டைகள் விழுந்த சுவர்கள் வழியே நான் இந்தப் பூனைகளிலிருந்து தப்பித்து விடுவேனா? அல்லது ஒட்டிய அட்டைகளாய் இவைகளும் உடன் தொடருமா? அம்மா சொல்வாள் பிள்ளைப் பெற்ற அறைக்குப் பூனைகள் வரும் மாமிச மணத்திற்காக என்று. அந்த மாமிசமும் என் உதிரம் கலந்த சிறுநீரில் வௌ¤ வரும் மாமிசமும் ஒன்றா? இது ஐனனத்திற்கானதா? மரணத்திற்கானதா? உதிரத் துகள்கள் எதற்கானது?
உச்சந்தலையில் நீட்டிக்கொண்டிருக்கும்கூர்மையான ஊசி என்னைப் பூனைகளுடன் அழுத்திக் குத்தி சொருகியிருக்கிறது. பூனைகளின் கண்கள் பச்சையாய் மட்டும் ஔ¤ராமல், சிவப்பாயும், நீலமாயும் ஔ¤விட்டு என் உடல் நெருப்பைத் தன் கண்களின் வழியேவும் படர விட்டுக் கொண்டிருந்தன. என் உடல் உஷ்ணம் சிறிதும் குறையாமல் வெந்நீர் ஊற்றென ஊற்று வாயில் தெரியாமல் வௌ¤வந்து கொண்டிருக்கிறது. சமமாகப் பரவி எல்லா தூவாரங் களிலிருந்தும் ஊற்றுவாயில் கொண்டு ஊறி வருகிறது. நானே பூனை சுற்றிப் படர்ந்த, வெப்¢பத்தை வௌ¤விட்டுக் கொண்டு சுற்றிலும் உஷ்ணம் பரவிய விதானச் சித்திரமாக மேல் தளத்தில் அப்பி இருந்தேன். கீழ் படுக்கையில் இருந்து நான் மேல் நோக்கியும் மேலிருந்து கீழ்நோக்கியும் என்னை நானே பிரதிபலிப்புப் போல் பார்த்துக் கொண்டு இருந்தாலும், கீழ் படுக்கையில் படுத்திருந்த என் நாடி
நரம்புகள் அடைத்துக் கொண்டு வேகவேகமாய் என் உடலைச்சுற்றி வலி வந்து கொண்டிருந்தது.
பெரிய பெரிய புத்தகமாக புரியாத மொழியில் அம்மா தான், படித்து அடுக்கி வைத்திருப்பார் பைண்ட் இட்டு. அவைகள் தலை வழி திறக்கும் அலமாரியில் அடிப் பெட்டித் திறப்புக்களில் அடுக்கப் பட்டிருக்கும். எப்போதும் அழகாக.. புத்தகங்கள் படிப்¢பதற்காக மட்டுமல்ல பார்ப்¢பதற்கு மானது என்று உணர்த்த வல்லவைகள். அவற்றில் அடிக்கடி வண்ணப் படங்கள் தென்படும். நீண்ட வழியை செங்குத்தாக அடைத்துக் கண்டிருக்கும் , இருமறுங்கும் செடிகளும், கொடிகளும் அவற்றில் ஆங்காங்கே தலைகள் எட்டிப்பார்த்துக் கொண்டு, யாருடையவை அவைகள்? ஏன்தொங்குகின்றன? பாதையில் ஏன் யாருமில்லை? செடிகளில் ஏன் பறவைகள், பூக்கள் இல்லை? செடிகளில் இடையில் செங்குத்தாக ஓடுவது பாதையா அல்லது குறுகிய நிலையிலிருந்து அகலமாக ஓடிவரும் நதியா? அல்லது செங்குத்தாக இரும்புப் பலகையாக அடர்ந்து வரும், விழும் நீர்வீழ்ச்சியா?
பெரிய வாணலியில் சூடு பறக்க கொதித்துக் கொண்டிருக்கும் திரவத்தில் முக்கிப் போட அருகில் அடுக்கப்¢பட்டிருக்கும் பொருட்கள். மரணம் வாணலியில் திரவமாக்க கொதித்துக் கொண்டிருந்தது. நான் விதானத்திலிருந்து எனக்காகக் கொதித்துக் கொண்டிருக்கும் திரவத்தில் இந்தப் பூனை களுடன்தான் விழப்போகிறேன். இந்தப் பூனைகளின் அலறல் அப் போதாவது அடங்க வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக பூனைகளின் இழுத்து இழுத்து அலறும் குரல் வலையிட்டுப் பின்னி அறைமுழுவதும் தொங்கிக் கொண்டு, அல்லது திடமான நூலாக இழுத்துக் கட்டப்பட்டுக் கிடக்கின்றன. பின்னப்பட்ட வலைகளில் தொங்கும் பாட்டில்களில், மருந்துகள், பழங்கள் மற்றும் மரணங்கள்.
ஆனால் அன்று முழுவதும் வலியிலும், பூனைளகளாலும் அவஸ்தைப் பட்ட நான் மறுநாள் கீழ் வீட்டில் கேட்ட போது பூனைகளின் அலறலை யாருமே கேட்கவில்லை என்றே கூறினர். என்னைப் பொறுத்தவரை பூனைகளும் மரணமும் அன்றைய நிஐம்.எங்கோ சிறு பிசகலில் மரணம் விட்டுப் போயிருந்தது. பூனைகள் மட்டும் இருந்தன. என் உடனிருந்த கணவருக்கும் பூனைகள் நிஐம்தான். மரணம்
அன்று என்னைவிட்டு அகன்றுவிட்டாலும் ஒரு இலேசான இறகாக அது அவ்வப் போது என் முன் வண்ண வண்ண உருவம் கொண்டு நிற்கும். ஆனால் மரணம் கொதிக்கும் திரவமல்ல, வெது வெதுப்பான இதமான சூட்டடைத்த பைதான் என்று அறிந்த போது வலியற்ற ஒலியற்ற ஆனந்தத்தில் மிதந்ததாக நினைவு. அது எப்போதும் சிக்கென வசப்படுவ தில்லை. மரணத்தின் முன் அனுபவம் போல் பூனை வாயோரம் ஒட்டிக் கொண்டு இருக்கும் கிளியின்இறகு. மரணம் பூனைகளால் உட்கொள்ள ப்பட்டுவிட்டது கிளிகளாக. அதன் இறகு மட்டுமே என் முன் பச்சை வண்ணம் கொண்டு. பூனைகள் தங்களின் பறத்தலுக்கான இறகு முளைப்பதின் ஆரம்பம் இது என்ற மிதப்பில் சுற்றுச் சுவரில் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக் கின்றன. மரணம் பூனையாகுமா அல்லது கிளியாகுமா அல்லது பெயரில்லாப் பறவையா கொதிக்கும் திரவமா என்று யோசித்து யோசித்துப் பார்க்கையில் மரணம் கவிதையாயிற்று.
No comments:
Post a Comment